2 மாதத்தில் 30 பேர் உடலுறுப்புகள் தானம் - அமைச்சர் சுப்பிரமணியன் தகவல்.! - Seithipunal
Seithipunal


சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இளைஞர் ஒருவர் மூளைச்சாவு அடைந்த நிலையில், அவர் தனது உடல் உறுப்புகளை தானம் செய்ததனால், அவரது உடலுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மரியாதை செய்தார்.

அதன் பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சுப்பிரமணியன், ‘’முப்பத்து மூன்று வயதான இளைஞர் நேற்று இரவு மூளைச்சாவு அடைந்த நிலையில், அவரது பெற்றோர்களிடம் உடல் உறுப்புதானம் குறித்து எடுத்துக்கூறிய பிறகு மகனின் உடல் உறுப்புகளை தானமாக அளித்துள்ளார்கள்.

நூற்றாண்டைக் கடந்த ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் முதல் நிகழ்வாக இன்று உடல் உறுப்புதானம் நடந்துள்ளது. தமிழகத்தில் மூளைச்சாவு அடைந்து உடல் உறுப்புதானம் செய்பவர்களின் உடலுக்கு அரசு சார்பாக மரியாதை செய்யப்படும் என்று அறிவித்திருந்த நிலையில், கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் மூளைச்சாவு அடைந்த 30 பேரின் உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் இந்திய அளவில் மட்டுமல்ல, உலக அளவில் நிகழ்த்தப்பட்ட சாதனையாக பார்க்கப்படுகிறது. இந்த 30 பேரின் உடல் உறுப்பு தானமும் பலரின் வாழ்க்கையில் விளக்கேற்றி வைத்துள்ளது. 

அவர்களின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என்று அறிவித்த பிறகு 3315 பேர் உடல் உறுப்பு தானம் செய்ய முன் வந்துள்ளனர். உடல் உறுப்பு வேண்டி ஏழு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காத்திருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் தேவையான நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறோம்’’ என்றுத் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

thirty peoples organs donate in tamilnadu


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->