விசிகவுக்கு கொடுத்த நெருக்கடியால் மாநாட்டு பணிகளில் கவனம் செலுத்த முடியவில்லை - திருமா வேதனை.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் மதுவிலக்கை வலியுறுத்தி வரும் அக்டோபர் மாதம் 2-ஆம் தேதி அக்கட்சியின் மகளிர் விடுதலை இயக்கத்தின் சார்பில் ‘மது மற்றும் போதை ஒழிப்பு மாநாடு’ ஒன்றை கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடத்தப்போவதாக அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது. இந்த மாநாட்டில் மதவாத – சாதியவாத சக்திகளைத் தவிர மற்ற அனைத்துக் கட்சிகளும் எங்களுக்கு துணை நிற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் விசிகவுக்கு கொடுக்கப்பட்ட நெருக்கடிகளால் மது மற்றும் போதை ஒழிப்பு மகளிர் மாநாட்டு பணிகளில் கவனம் செலுத்த இயலவில்லை. மாநாடு நோக்கத்தையே மடைமாற்றம் செய்து விட்டனர் என திருமாவளவன் வேதனை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பேசியுள்ளதாவது:-

"மனித வளத்தைப் பாதுகாக்கும் நோக்கில் நாடு முழுவதும் மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து அக்டோபர் 2-ம் தேதி மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மகளிர் மாநாட்டை நடத்துகிறோம். மண்டல வாரியாக செயற்குழு கூட்டத்தில் நான் பேசியபோது நினைவுகூர்ந்ததை வைத்து, அதிகாரத்தில் பங்கு தந்தால் மட்டுமே கூட்டணியில் நீடிப்போம் என்பதுபோல் கொள்கை எதிரிகள் விமர்சனங்களை முன்வைத்தனர்.

எந்த நோக்கத்துக்காக மாநாட்டை ஒருங்கிணைத்தோமோ அந்த நோக்கத்தை சிதறடிக்கக் கூடிய வகையில் விவாதங்களை மடைமாற்றம் செய்தது மிகுந்த வேதனை தருகிறது. விசிகவுக்கு கொடுத்த நெருக்கடிகளால் மாநாட்டு பணிகளில் போதிய கவனம் செலுத்த இயலவில்லை. இருந்தாலும் மாநாடு நடத்துவோம் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது" என தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

thirumavalavan speech about conference


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->