தகாத உறவில், தம்பி மனைவி.. தலையிட்ட ஹெட்மாஸ்டர் பெண்.. பாய் பெஸ்டியை ஏவி கொலை.!  - Seithipunal
Seithipunal


திருப்பத்தூர் பகுதியில் பெண் தலைமை ஆசிரியை ரஞ்சிதம் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கெடுக்கிடும் தகவல் வெளியாகி இருக்கிறது. 

திருப்பத்தூர் பகுதியில் ரஞ்சிதம் என்பவர் பெண் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். சமீபத்தில், இவருடைய வீட்டிற்குள் மர்ம நபர்கள் புகுந்து இரண்டு லட்சம் ரூபாய் மற்றும் பத்து பவுன் நகை ஆகியவற்றை கொள்ளையடித்து ரஞ்சிதத்தை கொலை செய்துவிட்டு சென்றனர். 

Seithi Punal (@seithipunal) / Twitter

இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கொலை செய்தவர்களை தேடி வந்த நிலையில் ரஞ்சிதத்தின் வீட்டிற்கு அருகில் இருந்த தம்பியின் மனைவி நதியாவிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்பொழுது, நதியா போலீசாரிடம் அளித்த பதிலில் சந்தேகம் ஏற்பட்டது. 

இதனை தொடர்ந்து, போலீசார் நதியாவிடம் கிடுக்கு பிடி விசாரணை மேற்கொண்டதில் இந்த கொலைக்கு காரணமே நதியா தான் என்பது தெரிய வந்துள்ளது. நதியாவின் கணவர் வெளிநாட்டில் வேலை செய்து வந்துள்ளார். அப்பொழுது, நதியாவிற்கு சூர்யா என்ற வேறொரு ஆடவனுடன் தகாத உறவு ஏற்பட்டுள்ளது. 

காதலிக்கும் நபர்களே அது மட்டும் காதல் அல்ல..! எத்தனை எதிர்ப்பிற்கும்  வலிகளுக்கும் மத்தியில் பெண்கள் இருக்கிறார்கள் தெரியுமா?.!! - Seithipunal

இதை அறிந்த ரஞ்சிதம் தனது தம்பியிடம் இது குறித்து தெரிவித்துள்ளார். எனவே, ரஞ்சிதாவின் தம்பி மனைவி நதியாவை கண்டித்துள்ளார். இது குறித்து குடும்பத்தில் தகராறு ஏற்பட்டு வந்துள்ள நிலையில் தனது நண்பர்களை ஏவி நதியா ரஞ்சிதத்தை கொலை செய்தது தெரியவந்துள்ளது. 

இதனை தொடர்ந்து நதியா அவரது கள்ளக்காதலன் சூர்யா மற்றும் அவர்களுக்கு உதவியாக இருந்த நண்பர்கள் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

thirupattur head master women killed for illegal affair


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->