#BreakingNews | திருவள்ளூரில் பற்றி எறிந்த ஆலை! உடல் கருகி பலியான உயிர்கள்!
Thiruvallur Paint Factory Fire Accident
திருவள்ளூர் அடுத்த கக்கலுர் தொழிற்பேட்டையில் அமைந்துள்ள பெயிண்ட் தொழிற்சாலை ஒன்றில் இன்று மாலை தீ விபத்து ஏற்பட்டது.
இந்த தீ விபத்தில் பெயிண்டுக்கு பயன்படுத்தக்கூடிய ரசாயன பொருட்கள் வெடித்து சிதறின. இதன் காரணமாக தீ மளமளவென ஆலை முழுவதும் பரவியது.
உடனடியாக தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த தீ விபத்தில் ஆலையில் பணியாற்றிய மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். இதில் இருவர் உடல் கருகி பலியாகியுள்ளனர். மேலும் 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பெயிண்ட் மற்றும் ரசாயனம் ஆலை முழுவதும் இருப்பதால், தீயை கட்டுப்படுத்துவதில் தீயணைப்புத் துறையினருக்கு சவாலாக இருந்தது.
பல மணி நேரமாக தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டு வந்தனர். மேலும் சம்பவ இடத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் ஆலையில் வேறு தொழிலாளர்கள் சிக்கி உள்ளனரா என்பது குறித்த தகவல் எதுவும் இல்லை. தற்போது வரை மூன்று பேர் பலியாகி உள்ளனர். 10 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
English Summary
Thiruvallur Paint Factory Fire Accident