வள்ளுவர் சனாதன துறவி! சர்ச்சையை கிளப்பிய ஆளுநர்! போட்டுத்தாக்கிய முதல்வர்! - Seithipunal
Seithipunal


நெற்றியில் விபூதி, காவி உடை உடன் இருக்கும் திருவள்ளுவரின் புகைப்படத்தை பகிர்ந்து, தமிழக ஆளுநர் ஆர்என் ரவி பழைய சர்ச்சையை மீண்டும் எழுப்பி உள்ளார்.

திருவள்ளுவர் தினமான இன்று தமிழக ஆளுநர் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், "திருவள்ளுவர் தினத்தில்,  ஆன்மிக பூமியான நமது தமிழ்நாட்டில் பிறந்த பெரும்புலவரும், சிறந்த தத்துவஞானியும் பாரதிய சனாதன பாரம்பரியத்தின் பிரகாசமான துறவியுமான திருவள்ளுவருக்கு எனது பணிவான மரியாதையை  செலுத்துகிறேன்.

அவரது ஞானம் நமது தேசத்தின் சிந்தனை மற்றும் அடையாளத்தை வடிவமைத்து, வளப்படுத்தி ஒட்டுமொத்த மனித குலத்துக்கு வழிகாட்டியாகவும்  உத்வேகத்தின் ஆதாரமாகவும் நீடிக்கிறது. இந்த புனிதமான நாளில், அனைவருக்கும் எனது அன்பான நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்" யென்று ஆளுநர் ரவி தெரிவித்திருந்தார்.

ஏற்கனவே திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்து, நெற்றியில் விபூதியட்ட புகைப்படத்தை பாஜகவினர் பரப்பிய புகைப்படத்திற்கு திமுக, திராவிட கழகத்தை சேர்ந்தவர்கள் கடுமையான எதிர்ப்பையும், கண்டனத்தையும் தெரிவித்திருந்தனர். 

இந்த நிலையில், மீண்டும் தமிழக ஆளுநர் அதேபோன்ற புகைப்படத்தை வெளியிட்டு, "வள்ளுவர் சனாதன பாரம்பரியத்தின் பிரகாசமான துறவி" என்று குறிப்பிட்டு இருப்பதற்கு, திமுகவினர் கடுமையான கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இதற்கிடையே தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், 'தமிழ்நாட்டில் வள்ளுவரை யாரும் கரைபடுத்த முடியாது' என்று மறைமுகமாக ஆளுநருக்கு பதில் கொடுத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thiruvalluvar Kavi RNRavi BJP vs DMK


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->