#திருவாரூர் | உர மூட்டை வேண்டுமா? நீங்கள் எந்த சாதி? விவசாயியை பார்த்து கேள்வி கேக்கும் அவலம்! - Seithipunal
Seithipunal


திருவாரூரில் ஆதார் எண் கொடுத்து விவசாயிகள் உரம் வாங்கும் போது, சாதி விபரங்களை கொடுத்தால் தான் உரம் கிடைக்கும் என்ற புகார் புகார் எழுந்துள்ளது.

(இதுகுறித்து பிரபல செய்தி ஊடகம் ஒன்று விடுத்துள்ள செய்தியின் அடிப்படையில் கீழ்க்கண்ட செய்தி தொகுத்து வழங்கப்படுகிறது)

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள சில உரக் கடைகளில், விவசாயிகள் ஆதார் எண் கொடுத்து உரம் பெற்று வந்தனர். மத்திய அரசு கொடுக்கக்கூடிய மானியம் விவசாய விவசாயிகளுக்கு சென்றடைவதற்காக இந்த ஆதார் எண் கொடுக்கும் நடைமுறை உள்ளது.

இந்த நிலையில், ஆதார் எண் விவரங்களுடன் விவசாயிகள் தங்களின் சாதி விவரத்தையும் கொடுத்தால் தான், உரம் கிடைக்கும், வழங்குவோம் என்று உரக்கடை உரிமையாளர்கள் கூறுவதாக தெரிகிறது.

இதுகுறித்து விவசாயி ஒருவர் அளித்துள்ள பேட்டியில், "சில கடைகளில் சாதி பெயரை கேட்பதில்லை. அவர்களாகவே பொது பிரிவினர் என்று கொடுத்துவிட்டு எங்களுக்கு உரத்தை வழங்குகின்றனர்.

இந்த சாதி கேட்கும் முறை தவறானது. உரம் வாங்கும் விவசாயிகள் பல சாதிகளில் இருக்கின்றனர். அவர்களிடம் சாதியை கேட்பது தவறான நடைமுறை. இதனை தடுத்து நிறுத்த வேண்டும்" என்று விவசாயி கோரிக்கை வைத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thiruvarur Farmers issue some news 08032023


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->