இது எங்களுடைய கோயில், எது வேண்டுமானாலும் செய்வோம், நீ யார்?...கோயிலுக்குள்ள கிரிக்கெட் விளையாடுனா என்ன தப்பு- எச்.ராஜா! - Seithipunal
Seithipunal


சிதம்பரம் நடராஜர் கோவில் வளாகத்தில், 10-க்கு மேற்பட்ட தீட்சிதர்கள் கிரிக்கெட் விளையாடியதால் சர்ச்சை ஏற்பட்டது. கோவிலுக்கு சாமி தரிசனத்திற்கு வந்த விசிக நிர்வாகி இளையராஜா, தீட்சிதர்களின் கிரிக்கெட் விளையாட்டை தனது செல்போனில் பதிவு செய்தார்.

இதைக் கண்ட தீட்சிதர்கள், இளையராஜாவை கடுமையாக எதிர்த்து, "கோவிலில் கிரிக்கெட் விளையாடலாமா? ஆகம விதிக்கு இது எதிரானதல்லவா?" என அவர் கேள்வி எழுப்பியபோது, தீட்சிதர்கள், "இது எங்களுடைய கோயில், எது வேண்டுமானாலும் செய்வோம், நீ யார்?" என்று முற்றிலும் எதிராக பேசினர்.

இதனால் பதற்றம் ஏற்பட்டது, அப்போது சில தீட்சிதர்கள் இளையராஜாவை தாக்கி, அவரின் செல்போனை பறித்து மிரட்டினர். இளையராஜா இதுகுறித்து சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார், இதன் அடிப்படையில் 5 தீட்சிதர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.

சம்பவத்தின் பின்னணி குறித்து பாஜக ஒருங்கிணைப்பாளர் எச். ராஜா பேசுகையில், "கோவில் வளாகத்தில் தீட்சிதர்கள் கிரிக்கெட் விளையாடியது தவறு அல்ல; கருவறையில் விளையாடினால் தான் அது தவறு" என்று கூறினார். எச். ராஜாவின் இந்த கருத்து, சிதம்பரம் கோவில் சம்பவத்தை மேலும் சர்ச்சைக்குள்ளாக்கி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

This is our temple we will do anything who are you What wrong with playing cricket in the temple H Raja


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->