மீனவர் பிரச்சினைக்கு இதுதான் தீர்வு! - துரை வைகோ OPEN TALK!
This is the solution to the problem of fishermen Durai Vaiko OPEN TALK
மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டுமென்றால், இலங்கையில் உள்ள கச்சத்தீவு மீட்கப்பட வேண்டும் என்று ம.தி.மு.க. முதன்மைச் செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார்.
திருச்சி நாடாளுமன்ற உறுப்பினரும், ம.தி.மு.க. முதன்மைச் செயலாளருமான துரை வைகோ செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், சுமார் 6 ஆயிரம் தமிழக மீனவர்கள்கடந்த 20 ஆண்டுகளில் இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டுள்ளனர் என்றும், இந்த எண்ணிக்கையில் 500 மீனவர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவித்தார்.
மேலும், சமீபத்திய ஆண்டுகளில் மீனவர்கள் மீதான தாக்குதலின் வீரியம் அதிகரித்துள்ளதாக தெரிவித்த அவர், கடந்த 8 மாதங்களில் 320-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளதாக கூறினார். தொடர்ந்து பேசியா அவர், கச்சத்தீவை மீட்டுவிட்டால் மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என்றும், ஆனால் இலங்கை அரசு ஒருபோதும் கச்சத்தீவை திருப்பி தராது என்று தெரிவித்தார்.
இதற்கிடையே சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசிய துரை வைகோ, திமுக கூட்டணியில் எந்த விரிசலும் இல்லை என்றும், 2026 சட்டமன்ற தேர்தலில் மதவாதக் கட்சிகள் தமிழகத்தில் காலுன்றக்கூடாது என்பதால் கூட்டணி கட்சிகள் ஒன்றுபடுவதாக தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
This is the solution to the problem of fishermen Durai Vaiko OPEN TALK