தூத்துக்குடியில் 1,200 கிலோ பீடி இலை போட்டலங்கள் கடத்திய மர்ம நபர்கள்! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடியில் சிப்காட் தலைமை காவலர் சண்முகம் தலைமையிலான போலீசார் நேற்று இரவு தூத்துக்குடி புதூர் பாண்டியாபுரம் பாலம் அருகில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். 

அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வேனை நிறுத்த சொல்லியபோதும், அந்த வேன் நிற்காமல் தருவைகுளம் கிழக்கு கடற்கரை சாலை வழியாக திரும்பி சென்றது. 

சந்தேகத்தின் பேரில் போலீசார் அந்த வேனை பின் தொடர்ந்து சென்று தடுத்து நிறுத்திய போது வேன் ஓட்டுநர் மற்றும் மற்றொருவர் அருகில் இருந்த காட்டுக்குள் நுழைந்து தப்பி ஓடிவிட்டனர். 

இதனை அடுத்து போலீசார் சரக்கு வேனை சோதனை செய்த பொது அதில் 40 மூட்டைகள் பீடி இலை பண்டலில் 1,200 கிலோ இருந்தது தெரியவந்தது. பீடி இலை கடத்தலில் ஈடுபட்டு தப்பியோடிய  2 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து வேனை பறிமுதல் செய்தனர்.  

பின்னர் தூத்துக்குடி சுங்கத்துறையினரிடம் கைப்பற்றப்பட்ட பீடி இலைகளை ஒப்படைக்கபட்டு   தப்பியோடியவர்கள் யார்? எங்கிருந்து கடத்தி வந்தனர்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

thoothukudi 1200 kg beedi leaves smuggled


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->