தூத்துக்குடியில் புதிய குளம், பூங்கா, நடைபாதை அமைக்க கலெக்டர் ஆய்வு!
Thoothukudi Collector inspects new pond, park, footpath
தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் புதிதாக குளம் அமைத்தல், குளங்கள்தூர்வாருதல், சிறுவர் பூங்கா அமைத்தல் மற்றும் நடைபாதை அமைத்தல் உள்ளிட்ட பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர்க.இளம்பகவத், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் புதிய சாலைகள், கழிவுநீர் வடிகால், மழைநீர் கால்வாய்கள், பூங்காக்களை புதிதாக உருவாக்கப்பட்டு வருகிறது . இதனடிப்படையில் தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் புதிதாக குளம் அமைத்தல், குளங்கள் தூர்வாருதல், சிறுவர் பூங்கா அமைத்தல் மற்றும் நடைபாதை அமைத்தல் உள்ளிட்ட பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் க.இளம்பகவத், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மழைக் காலத்தில் பெய்யும் மழைநீரை சேமித்து நிலத்தடி நீர்மட்டத்தினை உயர்த்தும் நோக்கில் தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் குளங்கள் தூர்வாரப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. அதுபோன்று, மாநகராட்சி 4 வது வார்டு அம்பேத்கர் நகர் பகுதியில் புதிதாக குளம் அமைத்து, அதன் சுற்றுப்புறத்தில் நடைபாதை மற்றும் சிறுவர் விளையாட்டுப் பூங்கா அமைப்பது குறித்தும், இரண்டாவது வார்டு மச்சாது நகர் பகுதியில் உள்ள குளத்தினை தூர்வாரி, புதிதாக நடைபாதை அமைப்பது குறித்தும் மற்றும் சிவன்கோயில் தெப்பக்குளத்தினை தூர்வாரி, புதிதாக சிறுவர் விளையாட்டுப் பூங்கா அமைப்பது குறித்தும் மற்றும் கோக்கூர் பகுதியில் உள்ள குளத்தினை தூர்வாரி, நடைபாதை அமைப்பது குறித்தும் மாவட்ட ஆட்சித் தலைவர் க.இளம்பகவத், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர். அம்பேத்கர் நகர் பகுதியில் உள்ள அறிவியல் தொழில்நுட்பம் பொறியியல் மற்றும் கணித பூங்கா மற்றும் நகர்சார் கற்றல் மையத்தின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, பார்வையாளர்களின் வருகை விவரம் குறித்து கேட்டறிந்தார்.
பின்னர், தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட மீளவிட்டான் பகுதியில் நீண்ட நாட்களாக குடியிருப்பவர்களுக்கு சிறப்பு வரன்முறை பட்டா வழங்குவது தொடர்பாக கணக்கெடுப்புப் பணிகள் நடைபெற்றுவருவதை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது, மாநகராட்சி ஆணையாளர் மதுபாலன், தூத்துக்குடி வருவாய் கோட்டாட்சியர் ம.பிரபு, தூத்துக்குடி வட்டாட்சியர் முரளிதரன் மாநகர துணை பொறியாளர் சரவணன் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.
English Summary
Thoothukudi Collector inspects new pond, park, footpath