எப்.ஐ.ஆர்.-ஐ கசிய விட்டவர்கள் தண்டிக்கப்படுவார்கள்; சென்னை போலீஸ் கமிஷனர்..! - Seithipunal
Seithipunal


​''பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சென்னை அண்ணா பல்கலையில் மாணவி விவகாரத்தில் முதல் தகவல் அறிக்கையை (எப்.ஐ.ஆர்.,) வெளியில் கசிய விட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும், '' என சென்னை போலீஸ் கமிஷனர் அருண் கூறியுள்ளார்.


சம்பவம் நடந்த பிறகு, கோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சந்தேகப்பட்ட நபர்களை அழைத்து விசாரித்தோம். அறிவியல் பூர்வமான விசாரணைக்கு பிறகு 25ம் தேதி காலை குற்றவாளியை கைது செய்ததாகவும், அவன் தன் குற்றத்தை செய்தான் என்பதை உறுதி செய்த பிறகே சிறையில் அடைத்தோம் என்று சென்னை போலீஸ் கமிஷனர் தெரிவித்துள்ளார்.

போக்சோ வழக்குகள், பெண்களுக்கு எதிரான குற்றங்களில் எப்.ஐ.ஆர்., இணையத்தில் பதிவேற்றம் செய்யும் போது அது தானாக 'பிளாக்' ஆகிவிடும். ஐ.பி.சி.,க்கு பதில் பி.என்.எஸ்., சட்டத்தில் வழக்குப்பதிவு செய்கிறோம். தொழில்நுட்ப பிரச்னை காரணமாக பிளாக் ஆவது தாமதமானது எனவும் கூறியுள்ளார். 

குறித்த நேரத்தில் ஒரு சிலர் அதனை பார்த்து தரவிறக்கம் (download) செய்துள்ளனர். அவர்கள் மூலம் எப்.ஐ.ஆர்., கசிந்து இருக்கலாம். புகார் அளித்தவருக்கு எப்.ஐ.ஆர்., அளிக்கப்பட வேண்டும். அதனடிப்படையில் பாதிக்கப்பட்டவருக்கு அளித்தோம்.

பாதிக்கப்பட்டவர் என்ன சொல்கிறாரோ அதனை அப்படியே பதிவு செய்வது தான் எப்.ஐ.ஆர். பாதிக்கப்பட்ட பெண்ணின் விவரங்களை வெளியில் சொன்னாலும் நடவடிக்கை எடுப்போம்.பாலியல் வழக்கில், எப்.ஐ.ஆர்., கசிவு செய்வது குற்றம். எதை எடுத்து விவாதம் செய்வது பெரிய குற்றம். பாதிக்கப்பட்டவர்களின் விவரம் எந்த வகையிலும் வெளியிடக்கூடாது. எப்.ஐ.ஆர்.,ஐ கசிய விட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். யார் என கண்டுபிடித்து நடவடிக்கை எடுப்போம். இதுதொடர்பாக கோட்டூர்புரம் போலீஸ் ஸ்டேசனில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

பாதிக்கப்பட்ட மாணவி போலீஸ் மீது நம்பிக்கை வைத்து புகார் அளித்தார். அவர்கள் நம்பிக்கை உறுதி செய்யும் வகையில் நடவடிக்கை எடுத்தோம். பாதிக்கப்பட்ட பெண் பாதுகாப்பாக இருக்கிறார். எந்த குற்றம் நடந்தாலும், யோசிக்காமல் போலீசாரை அணுகி புகார் அளித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். என்றும்  சென்னை போலீஸ் கமிஷனர் அருண் கூறியுள்ளார்..
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Those who leaked the FIR will be punished


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->