தூத்துக்குடியில் பயங்கரம் | மணல் கடத்தல் விவகாரத்தில் விஏஓ வெட்டி படுகொலை!
Thothukudi VAO Killed Sand Mafia
தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு அருகே மணல் கொள்ளை குறித்த தகவல் தெரிவித்த கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு அடுத்த முறப்பநாடு கிராம அலுவலராக பணியாற்றி வந்தவர் லூர்து பிரான்சிஸ். இன்று அவர் அலுவலகத்தில் பணியில் இருந்த போது, உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் லூர்து பிரான்சிசை கொடூரமாக வெட்டிவிட்டு தப்பி சென்றனர்.
ரத்த வெள்ளத்தில் கிடந்த லூர்து பிரான்சிஸ்யை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தித்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சம்பவம் குறித்த தகவல் அறிந்து வந்த போலீசார், லூர்து பிரான்சிஸ் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் கொலையாளிகள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில், கலியாவூரை சேர்ந்த ராமசுப்பிரமணியன் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தலைமறைவாகியுள்ள மாரிமுத்து என்பவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
மணல் கடத்தல், மணல் அல்ல அனுமதி தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் புகார் அளித்ததாகவும், இதனால் ஆத்திரமடைந்து இந்த படுகொலை சம்பவம் அரங்கேறியுள்ளதாகவும் முதல் கட்ட தகவல் வெளியாகி உள்ளது.
English Summary
Thothukudi VAO Killed Sand Mafia