மண்டபம் பகுதியில் சிக்கிய 1289 கிலோ கடல் அட்டைகள் - வனத்துறையினர் அதிரடி நடவடிக்கை.! - Seithipunal
Seithipunal


மண்டபம் பகுதியில் சிக்கிய 1289 கிலோ கடல் அட்டைகள் - வனத்துறையினர் அதிரடி நடவடிக்கை.!

மீனவர்கள் கடலில் வாழும் அரிய வகை உயிரினங்களை பிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அவற்றில் கடல் அட்டையும் ஒன்று. இந்த நிலையில் இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள மண்டபம் கடற்கரை பகுதியில் கடல் அட்டைகளை பதுக்கி வைத்திருப்பதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

அதன் படி வனத்துறையினர், வன உயிரின காப்பகத்தினர் மற்றும் கடலோர சிறப்பு படையினர் உள்ளிட்டோர் இணைந்து மண்டபம் வடக்கு கடற்கரையில் பகுதியில் சோதனை நடத்தினர்.

அப்போது, அதேப்பகுதியில் பதப்படுத்தப்பட்ட 242 கிலோ கடல் அட்டைகள் மற்றும் உயிருடன் இருக்கக் கூடிய 325 கிலோ கடல் அட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 

அவற்றை பறிமுதல் செய்த போலீசார், இந்தச் சம்பவம் தொடர்பாக மண்டபம் பகுதியைச் சேர்ந்த பூ மரைக்காயர், காதர் உள்ளிட்ட இருவரை கைது செய்தனர். இதே போன்று மண்டபம் சேது சாலை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பதப்படுத்தப்பட்ட 722 கிலோ கடல் அட்டையினை பறிமுதல் செய்தனர். 

இது தொடர்பாக மண்டபத்தை சேர்ந்த அன்வர் சாதிக் என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் இந்தச் சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான ஃபைசர் இப்ராகிம்சா என்பவரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

thousand kig sea cards seized in kmandabam


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->