நாமக்கல் || காவிரி ஆற்றில் மிதந்த 3 சடலங்கள் - போலீசார் தீவிர விசாரணை.! - Seithipunal
Seithipunal


நாமக்கல் || காவிரி ஆற்றில் மிதந்த 3 சடலங்கள் - போலீசார் தீவிர விசாரணை.!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிபாளையம் காவேரி ஆற்றில் சடலம் மிதந்து கொண்டிருப்பதாக அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் புகார் தெரிவித்திருந்தனர். அந்தப் புகாரின் படி போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென்று பார்த்தனர். 

அப்போது ஆற்றில் இருந்த ஆகாய தாமரைகளுக்கிடையே தொடர்ந்து மூன்று ஆண் சடலங்கள் மிதந்து கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே போலீசார் மீட்புப்படையினரின் உதவியுடன் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

பின்னர் சம்பவம் போலீசார் இவர்கள் மூன்று பெரும் தற்கொலை செய்து கொண்டார்களா? அல்லது யாரேனும் கொலை செய்து இவர்களை ஆற்றில் வீசினார்களா? என்று தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், உயிரிழந்தவர்கள் யார் என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையே, அப்பகுதியில் உள்ள மக்கள், இது போன்று சடலங்கள் ஆற்றில் மிதந்து வரும்போது, தண்ணீர் மாசடையும் சூழல் ஏற்படுகிறது. ஆகவே, தகவல் அறிந்தவுடன் சடலங்களை அகற்றவும், அந்த தண்ணீரை யாரும் குடிநீராக பயன்படுத்தாமல் இருக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

three dead body floting in cauvery river


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->