ஈரோடு || திடீர் வயிற்றுவலியால் துடித்த 3 பேர் - விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்.!   - Seithipunal
Seithipunal


ஈரோடு மாவட்டத்தில் உள்ள கருங்கல்பாளையம் ராஜாஜிபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் பிரபாகர்-அமுதா தம்பதியினர். இவர்களுடைய மகள் நீலாம்பரி. இவர்கள் மூன்று பேரும் நேற்று ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்ட அவர்களிடம் மருத்துவர்கள் விசாரணை செய்தனர்.

அப்போது அவர்கள், கடந்த 21-ந் தேதி இரவு கருங்கல்பாளையத்தில் இயங்கி வந்த ஒரு ஓட்டலில் 'சிக்கன் ரைஸ்' வாங்கி, 3 பேரும் பகிர்ந்து உண்டதாகவும், மறுநாள் முதல் கடுமையான வயிற்றுவலியால் பாதிக்கப்பட்டதாகவும், 3 பேரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் உடல்நலம் சரியாகவில்லை என்பதால் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்ததாகவும் தெரிவித்தனர்.

இதுகுறித்து மருத்துவர்கள் ஈரோடு மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை நியமன அதிகாரிக்கு தகவல் அளித்தனர். அதன் படி அதிகாரிகள் கருங்கல்பாளையத்துக்கு சென்று சம்பந்தப்பட்ட ஓட்டலில் சோதனை நடத்தினர். அங்கு உணவக சமையல் அறை சுகாதாரமற்ற முறையில் இருந்ததும், சரியான பராமரிப்பு இல்லாமல் இருந்ததையும் அதிகாரிகள் கண்டறிந்தனர். 

மேலும், அந்த ஓட்டல் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் உரிமம் பெறாமல் இயங்கியதும், இறைச்சி மற்றும் மூலப்பொருட்கள் வாங்கியதற்கான ரசீது, கழிவு எண்ணெய் தொடர்பான நடைமுறைகள், உணவு கையாளுவதற்கான மருத்துவ தகுதி சான்று என்று எந்த முறையான ஆவணங்கள் இல்லாததும் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து அந்த ஓட்டல் தற்காலிகமாக மூடப்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

three peoples admitted hospital for eat chicken rice in erode


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->