பெரம்பூர் ரெயில் நிலையத்தில் 20 கிலோ கஞ்சா பறிமுதல் - 3 பேர் கைது.!!
three peoples arrested for drugs kidnape in chennai perambur junction
பெரம்பூர் ரெயில் நிலையத்தில் 20 கிலோ கஞ்சா பறிமுதல் - 3 பேர் கைது.!!
சென்னை பெரம்பூர் ரெயில் நிலையம் அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகப்படும் வகையில் ரெயிலில் இருந்து இறங்கி வந்த பெண் உள்பட மூன்று பேரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.
பின்னர் அவர்களிடம் இருந்த உடைமைகளை சோதனை செய்தனர். அதில் கஞ்சா மற்றும் கஞ்சா ஆயில் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் பெண் உள்பட மூன்று பேரையும் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர்.
அந்த விசாரணையில், அவர்கள், நேபாளத்தை சேர்ந்த ராம் சந்திரன், முஸ்கான் ஜா மற்றும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த உபேந்திர குமார் என்பது தெரிய வந்தது.
மேலும், அவர்கள் பீகாரில் இருந்து ரெயில் மூலம் கஞ்சா மற்றும் கஞ்சா ஆயிலை சென்னைக்கு கடத்தி வந்து விற்பனை செய்வதும் தெரிய வந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக இணை கமிஷனர் ரம்யாபாரதி தெரிவித்ததாவது, "கைதான மூன்று பேரிடம் 20 கிலோ கஞ்சா மற்றும் 300 மில்லி கஞ்சா ஆயில் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மொத்த மதிப்பு ரூ.1 கோடி இருக்கும். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியை தேடி வருகிறோம். விரைவில் அவர் கைது செய்யப்படுவார்" என்றுத் தெரிவித்துள்ளார்.
English Summary
three peoples arrested for drugs kidnape in chennai perambur junction