நடுரோட்டில் அரசு பேருந்தை வழிமறித்து கொள்ளை - மூன்று பேருக்கு போலீசார் வலைவீச்சு.!! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கேடிவிசி நகரை சேர்ந்த ராமசாமி. நடத்துனராக பணிபுரிந்து வரும்  இவர் திருச்செந்தூரில் இருந்து மதுரை நோக்கி சென்று அரசு பேருந்தில் பணியில் இருந்துள்ளார்.

இந்தப் பேருந்து 20க்கும் மேற்பட்ட பயணிகளுடன்  ஆத்தூர் அடுத்த பழைய காயல் பேருந்து நிறுத்தத்தை கடந்து சாலையில் இருந்து வேகத்தைடையில் ஏறி இறங்கிய போது இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று வாலிபர்கள் பேருந்தை வழிமறித்து பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் தாக்கி பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றனர்.

இந்தத் தாக்குதலில் ஓட்டுநர் நடத்துனர் இருவரும் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த பயணிகள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டு படுகாயம் அடைந்த ஓட்டுநர் மற்றும் நடத்தினரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் தப்பித்து சென்ற மூன்று நபர்களையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

three peoples attack govt bus driver and conductor in thoothukudi


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->