கல்லூரி வளாகத்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை - புதுச்சேரியில் பரபரப்பு.!
three peoples harassment to college students in puthuchery
சமீப காலமாகவே இந்தியாவில் கல்வி நிலையங்களில் பாலியல் தொல்லை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், புதுச்சேரியில் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் வடமாநிலத்தில் இருந்து படிக்க வந்த மாணவி தனது ஆண் நண்பருடன் பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த 3 பேர் கொண்ட கும்பல் அந்த ஆண் நண்பரை விரட்டியடித்து விட்டு, மாணவியிடம் அத்துமீறியுள்ளது. அந்த மூன்று பேரில் ஒருவர் பல்கலைக்கழகத்தில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வருபவர் ஆவார்.
இதனால், அதிர்ச்சியடைந்த மாணவி சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவருக்கு பாலியல் வன்கொடுமை சம்பவம் நடந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், புதுச்சேரியில், பல்கலைக்கழக வளாகத்தில் மற்றொரு பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது.
English Summary
three peoples harassment to college students in puthuchery