தொடரும் அட்டூழியம் - தமிழக மீனவர்கள் 3 பேர் கைது.!
three tamilnadu fishermans arrested
தமிழகத்தை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் போது எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் சிறைபிடிக்கும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்து வரும் நிலையிலும், இலங்கை கடற்படையினர் கைது செய்யும் சம்பவம் மட்டும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் மூன்று பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். அதுமட்டுமல்லாமல், மீனவர்களின் விசைப்படகையும் பறிமுதல் செய்துள்ளனர்.

எல்லைத்தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை குற்றம் சாட்டியுள்ளது. கைது செய்யபட்ட மீனவர்கள் காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு அழைத்து சென்றனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணைக்கு பிறகு மீனவர்களை படகுடன், மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தச் சம்பவம் சக மீனவர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
three tamilnadu fishermans arrested