கழிவுநீர் தொட்டியில் விழுந்து 3 வயது குழந்தை பலி... உறவினர்கள் சாலை மறியல்! - Seithipunal
Seithipunal


விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள தனியார் பள்ளியில் உள்ள கழிவுநீர் தொட்டியில் விழுந்து மூன்றரை வயது குழந்தை உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் , பரபரப்பையும்  ஏற்படுத்தி உள்ளது.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை சேர்ந்தவர் பழனிவேல்,இவரது மனைவி சிவசங்கரி.இந்த தம்பதினருக்கு  3 வயதில் லியா லட்சுமி என்ற குழந்தை உள்ளது , இந்த குழந்தை அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் யு.கே.ஜி. படித்து வந்தார்.

இந்நிலையில், இன்று வழக்கம்போல பள்ளிக்கு சென்ற குழந்தை பள்ளியில் உணவு இடைவேளையின்போது பள்ளி வளாகத்திற்குள் உள்ள கழிவுநீர் தொட்டி அருகே விளையாடிக் கொண்டிருந்ததாபோது அந்த கழிவுநீர் தொட்டியின் மீது போடப்பட்டிருந்த இரும்பு மூடி உடைந்து கழிவுநீர் தொட்டிக்குள் குழந்தை விழுந்துள்ளது.

குழந்தை லியா லட்சுமி கழிவுநீர் தொட்டிக்குள் விழுந்ததை அறிந்து ஆசிரியர்கள் மற்றும் பள்ளி ஊழியர்கள் உடனடியாக குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.  தனியார் பள்ளியில் உள்ள கழிவுநீர் தொட்டியில் விழுந்து மூன்றரை வயது குழந்தை உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இந்த சம்பவம் தொடர்பாக விக்கிரவாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் குழந்தை பலியான சம்பவத்தால் பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் குழந்தை பலிக்கு நீதி கேட்டும் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Three year old boy dies after falling into septic tank Relatives block the road


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->