கிருஷ்ணகிரியில் சோகம் - உச்சத்துக்கு ஏறிய மதுபோதை.! இளைஞருக்கு எமனாக மாறிய நண்பர்கள்.!
three youths kill north state young in krishnagiri
கிருஷ்ணகிரியில் சோகம் - உச்சத்துக்கு ஏறிய மதுபோதை.! இளைஞருக்கு எமனாக மாறிய நண்பர்கள்.!
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் சிப்காட் தொழிற்பேட்டை அருகே பள்ளூரில் தைலமர தோப்பில் பாதி எரிந்த நிலையில் வாலிபரின் உடல் கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
அந்தத் தகவலின் படி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடலை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். இதைத்தொடர்ந்து போலீஸார் வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக போலீஸார் நடத்திய விசாரணையில் உயிரிழந்தவர் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த தீபக் ஹரிஜன் என்பதும், அவர் அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் ஊழியராக பணிபுரிந்து வந்ததும் தெரிய வந்தது.
மேலும், தீபக் ஹரிஜன் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவருடைய நண்பர்களான வடமாநிலத்தை சேர்ந்த மூன்று பேருடன் பள்ளூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஒன்றாக மது அருந்தியுள்ளார். அப்போது போதை தலைக்கேறியதில் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்தத் தகராறு கைகலப்பாக மாறியதில் தீபக் ஹரிஜனின் நண்பர்கள் மூன்று பேரும் சேர்ந்து அவரை அடித்துக் கொலை செய்து உடலை பள்ளூரில் உள்ள தைல மர தோப்புக்கு கொண்டு சென்று அங்கு தீ வைத்து எரித்து விட்டு சென்றது" தெரிய வந்துள்ளது.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் தலைமறைவான மூன்று வடமாநில வாலிபர்களையும் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பேரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
three youths kill north state young in krishnagiri