உங்கள் பல் பிரச்சனை சரிசெய்ய வேண்டுமா? அப்போ இதனை படியுங்கள்..!
Tips For teeth Care
பற்களுக்கும் நரம்பு மண்டலத்துக்கும் மிக நெருங்கிய தொடர்பு உள்ளது. சிலருக்கு பற்கள், ஈருகளில் பிரச்சனை ஏற்படும். அவற்றை சரிசெய்ய பிரித்வி முத்திரை உதவும். அதனை எப்படி செய்வது என பார்போம்.
பிரித்வி முத்ரா:
விரிப்பில் நேராக அமர்ந்து கொள்ளுங்கள். மோதிர விரலால் பெருவிரல் நுனியை தொடவும். மற்ற விரல்கள் தரையை நோக்கி இருக்கட்டும். மூன்று வேளைகளிலும் சாப்பிடுவதற்கு முன்பு இரண்டு நிமிடங்கள் இந்த முத்திரையை செய்து வர வேண்டும்.
எல்லா விரல்களிலும் அழுத்தம் கொடுக்கவேண்டும். பிரித்வி முத்திரையை செய்து வர நரம்பு மண்டலம் பலம்பெறும்.
பற்களில் ஆரோக்கியத்திற்கு மேலும் சில வழிகள்:
வெந்நீரில் உப்பு போட்டு வாய் கொப்பளிக்கும். கரும்பு 15 நாட்களுக்கு ஒரு முறை ஒரு அரை துண்டு பற்களில் மென்று சாப்பிட்டு வர பற்கள் பலம் பெறும். சுத்தமான நல்ல எண்ணெய் வாரம் ஒருமுறை வாயில் ஊற்றி கொப்பளித்து வர வாய் துர்நாற்றம் நீங்கும்.