திருநெல்வேலியில் புத்தகத் திருவிழா இன்று தொடக்கம்..!! - Seithipunal
Seithipunal


திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தில் பொருநை நெல்லை ஆறாவது புத்தகத் திருவிழா இன்று தொடங்கி அடுத்த 11 நாட்களுக்கு நடைபெற உள்ளது. இன்று தொடங்கும் புத்தகத் திருவிழாவானது வரும் மார்ச் 7ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்த புத்தக திருவிழாவிற்காக ஆதினி என்ற பெயரிடப்பட்ட இருவாச்சி பறவைகள் சின்னத்தை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் வெளியிட்டார். அதேபோன்று புத்தக பாலம் என்ற திட்டத்தையும் மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.

அப்பொழுது பேசிய அவர் "தமிழக அரசின் சார்பில் திருநெல்வேலி பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தில் இன்று முதல் அடுத்த மாதம் 7ம் தேதி வரை ஆறாவது பொருநை நெல்லை புத்தகத் திருவிழா நடத்தப்பட உள்ளது. 

முதல் மூன்று நாட்கள் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு அரங்கங்கள் மற்றும் பயிற்சி பட்டறை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த புத்தக திருவிழாவில் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிவாளர்கள் சங்கத்தின் சார்பில் 110 புத்தக அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. 

மேலும் நெல்லை மாவட்டத்தில் உள்ள சிறை நூலகம், அரசு பள்ளி கூட நூலகங்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பள்ளிகளில் உள்ள நூலகங்களுக்கு புதிய புத்தகங்களை நன்கொடையாக வழங்கும் புத்தக பாலம் எனும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதே போன்று புத்தக கண்காட்சியின் ஒரு பகுதியாக செய்தி மக்கள் தொடர்பு துறையில் சார்பில் ஓயா உழைப்பின் ஓராண்டு.. கடைகோடி தமிழன் கனவுகளை தாண்டி.. என்ற பெயரில் புத்தக கண்காட்சி மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன" என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tirunelveli book festival starts today


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->