திருநெல்வேலியில் பரபரப்பு | தாழ்வாக பறந்த ஹெலிகாப்டர்! பொதுமக்கள் அதிர்ச்சி! - Seithipunal
Seithipunal


திருநெல்வேலி, பாளையங்கோட்டை என். ஜி. ஓ காலனி பகுதியில் இன்று காலை தாழ்வாக ஹெலிகாப்டர் ஒன்று பறந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. 

அந்த பகுதியில் இருந்த பொதுமக்கள் இதனை பார்த்து வீடுகளை விட்டு வெளியே வந்து தாழ்வாக பறந்த ஹெலிகாப்டரை செல்போனில் வீடியோ மற்றும் புகைப்படங்கள் எடுத்து மகிழ்ந்தனர். 

ஹெலிகாப்டரின் இறக்கை அதிவேகமாக சுழன்றது. அந்த பகுதியில் ஹெலிகாப்டர் மீண்டும் 2 முறை தாழ்வாக பறந்து சென்றது. 

இது தொடர்பாக பகுதியில் இருந்த மக்கள் பெருமாள்புரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த போலீசார் சமத்துவ இடத்துக்கு வந்து வழக்கு பதிவு செய்து தாழ்வாக பறந்து சுற்றி திரிந்த ஹெலிகாப்டர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் இந்த ஹெலிகாப்டர் சில நாட்களுக்கு முன்பு கூடங்குளத்தில் இழுவை கப்பல் தரைதட்டி நின்றிருந்த நிலையில் அதனை மீட்பதற்காக வந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tirunelveli helicopter flew low 


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->