நெல்லை: காதல் திருமணம் செய்த தங்கை காவல் நிலையத்திலேயே கொலை முயற்சி..!
Tirunelveli Pettai Police Station Love Married Couple Ramya AnandhRaj Murder Attempt by Ramya Brother
காதல் திருமணம் செய்த தங்கை காதல் கணவருடன் காவல் நிலையத்தில் தஞ்சம் புக, சகோதரர் காவல் நிலையத்திலேயே இருவரையும் குத்திக்கொலை செய்ய முயற்சித்த சம்பவம் நடந்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பேட்டை கோடிஸ்வரன் பகுதியை சார்ந்தவர் ஆனந்தராஜ் (வயது 25). திருநெல்வேலி நகரம் பழனி தெரு பகுதியை சார்ந்தவர் ரம்யா (வயது 21). இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில், திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளனர்.
இதனையடுத்து, இன்று காலை பெற்றோர்களுக்கு தெரியாமல் கோவிலில் வைத்து தாலி கட்டி திருமணம் செய்துகொண்ட நிலையில், பேட்டை காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் புகுந்துள்ளனர். இதனால் காவல் துறையினர் காதல் ஜோடியின் பெற்றோரை அழைத்து சமாதானம் பேசியுள்ளனர்.
![](https://img.seithipunal.com/media/Pettai.png)
இதன்போது, ரம்யாவின் சகோதரர் ராம்குமார் காவல் நிலையத்திற்குள் புகுந்து தனது தங்கை ரம்யாவை கத்தியால் குத்தியுள்ளார். மேலும், அவரை காப்பாற்ற முயன்ற காதலன் ஆனந்தராஜுக்கும் கத்திக்குத்து விழுந்துள்ளது.
காயமடைந்த இறைவரையும் அருகேயுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்த காவல் துறையினர், ராம்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Tirunelveli Pettai Police Station Love Married Couple Ramya AnandhRaj Murder Attempt by Ramya Brother