திருப்பத்தூர் | பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ விபத்து.! தொழிலாளர்களின் நிலை? - Seithipunal
Seithipunal


திருப்பத்தூர், வாணியம்பாடி அருகே உள்ள கோணாமேடு பகுதியில் செயல்பட்டு வந்த பிளாஸ்டிக் குடோன் தொழிற்சாலையில் இன்று மதியம் 2 மணியளவில் தீ பற்றி எரிந்துள்ளது. 

இந்த தீ அருகில் இருந்த மர பர்னிச்சர் தொழிற்சாலைக்கும் வேகமாக பரவியதால் அந்த பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்துள்ளது. இது குறித்து அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். 

தகவல் அறிந்த தீயணைப்பு துறை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இன்று விடுமுறை நாள் என்பதால் தொழிற்சாலையில் தொழிலாளர்கள் யாரும் இல்லை என தகவல் வெளியாகி உள்ளது. 

இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது. இருப்பினும் சுமார் ரூ. 3 லட்சம் மதிப்பிலான மர சாமான்கள் எரிந்து சேதமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசரனை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tirupattur fire accident plastic cotton 


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->