திருப்பூர் | டீ கடையில் புகுந்த லாரி! கொடூர விபத்து! உடல் நசுங்கி பலியான உயிர்கள்!  - Seithipunal
Seithipunal


திருப்பூர் : தாராபுரம் அருகே சிமெண்ட் கலவை லாரி டீ கடையில் புகுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம்.

தாராபுரம் அடுத்த சூரியநல்லூர் பகுதியில் சாலையோரம் கலாமணி டீக்கடை வைத்து நடத்தி வருகிறார். இன்று காலை இவரின் கடை திறந்து வியாபாரம் நடத்திவந்த நிலையில், திருச்சியில் இருந்து சிமெண்ட் கலவை லோடு ஏற்றிய லாரி, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கலாமணியின் டீ கடையில் புகுந்தது.

இந்தக் கொடூர விபத்தில் டீ மாஸ்டர் முத்துச்சாமி (வயது 65), டீ அருந்திக் கொண்டிருந்த தோழன் (வயது 70) என்ற இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.

இந்த விபத்தில் லாரி ஓட்டுநர் ரத்தினகுமார் உள்ளிட்ட 6 பேர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு, தாரபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ஓட்டுநர் ரத்தினகுமார் உயிரிழந்தார்.

மற்ற 5 பேர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து குண்டடம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tiruppur Tharapuram Tea Shop Lorry Accident


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->