திருப்பூர் : தமிழை மறைத்துவிட்டார்களா? இல்லை மறந்துவிட்டார்களா? - ரெயில் நிலையத்தில் குழப்பத்தில் இருக்கும் பயணிகள்.! - Seithipunal
Seithipunal


திருப்பூர் மாவட்டம் ரெயில் நிலையத்தில் உள்ள ஒரு சேவை மையத்தில் தமிழ் மொழியில் 'சேவை மையம்' என்று பெயர்ப்பலகை எழுதப்பட்டு இருந்தது. அதுபோல் ஆங்கிலம் மற்றும் இந்தியிலும் அந்தப்பெயர் மொழி பெயர்க்கப்பட்டு எழுதப்பட்டிருந்தது. 

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு திடீர் என்று அந்த பெயர்ப்பலகையில் இந்தி எழுத்தால் 'சகயோக்' என்று பெரிதாக எழுதியிருக்கிறார்கள்.

அதுமட்டுமட்டுமல்லாமல், ஆங்கிலத்தில் 'இன்பர்மேசன் சென்டர்' என்பதற்கு பதிலாக ஆங்கில எழுத்தால் 'சகயோக்' என்றும், தமிழில் 'சேவை மையம்' என்பதற்கு பதிலாக தமிழ் எழுத்தால் 'சகயோக்' என்றும் எழுதப்பட்டிருந்தது. 

இந்த பெயர் பலகையை எந்த மொழியைச் சேர்ந்தவர் படித்தாலும் 'சகயோக்' என்றுதான் வாசிக்க முடியும். இதேபோல், இந்த சேவை மையத்தின் அருகில் காசி சங்கமம் என்ற பெரிய விளம்பரப் பதாகையில் அனைத்தும் இந்தி மொழியில் பெரிதாக எழுதப்பட்டு ஒரே ஒரு வாசகம் மட்டும் தமிழ் எழுத்தில் மிகவும் சிறியதாக எழுதப்பட்டுள்ளது. இதை படிக்கும் மக்கள் அனைவரும் ஆச்சரியத்துடனும், குழப்பத்துடனும் பார்த்து வந்தனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tirupur railway station near information office name board hindi language


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->