கிணற்றில் மிதந்த இளம் பெண் சடலம்: கொலையா? தற்கொலையா...? போலீசார் தீவிர விசாரணை! - Seithipunal
Seithipunal


திருப்பூர், அவிநாசிபாளையம் பகுதியில் உள்ள கோவிலுக்கு சொந்தமான கிணற்றில், தற்போது கனமழை பெய்து வருவதால் நீர்மட்டம் உயர்ந்து உள்ளது. 

இந்த கிண்ணத்தில் இளம் பெண் ஒருவர் பிணமாக மிதப்பதை அப்பகுதியில் இருந்தவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்து உடனடியாக அவிநாசி பாளையம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். 

தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயணைப்பு வீரர்களின் உதவியுடன் பெண்ணின் உடல் மீட்கப்பட்டது. 

பின்னர் இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் உயிரிழந்த பெண் அவிநாசி-திருப்பூர் பிரதான சாலையில் வசித்து வரும் சக்திவேல் என்பவரின் மனைவி என்றும் இவருக்கு ஒரு குழந்தை உள்ளது என்றும் தெரியவந்தது. 

இதனை அடுத்து போலீசார் இந்த பெண்ணை யாராவது கொலை செய்தார்களா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tirupur young woman dead body deep well


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->