திருவாரூர் மாவட்டத்தை அதிரவைத்த அதிகாரி! அடுத்தடுத்து வலையில் சிக்கிய குற்றவாளிகள்.! பின்னணி என்ன?
Tiruvarur DSP orders take action against illegal activities
திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்படி திருவாரூர் மாவட்டத்தில் வார இறுதி நாட்களில் போலீசார் ஒன்று சேர்ந்து சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்படி லாட்டரி விற்பனைக்கு எதிரான வேட்டையில் நன்னிலம் காவல் சரகத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டு சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதாக கடந்த இரண்டு நாட்களில் சுமார் 108 வழக்குகள் பதிவு செய்து வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
கஞ்சா விற்பனைக்கு எதிரான வேட்டையில் கொரடாச்சேரி, முத்துப்பேட்டை காவல் சரகத்தில் ஆறு வழக்குகள் பதிவு செய்து ஏழு பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த சுமார் 5,700 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
சட்டவிரோத மது விற்பனைக்கு எதிரான மேடையில் 89 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 89 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த 637 மது பாட்டில்கள் மற்றும் மது கடத்தலுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சூதாட்டத்திற்கு எதிரான வேட்டையில் 16 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்ட சட்டவிரோத செயல்பாடுகளின் தொடர்புடைய நபர்களை கைது செய்து வழக்கு தொடர்புடைய பொருட்களை கைப்பற்றிய காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டியுள்ளார்.
மேலும் சட்டவிரோத செயல்களான மது விற்பனை, கடத்தல், கஞ்சா, தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை, லாட்டரி விற்பனை போன்ற குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.
English Summary
Tiruvarur DSP orders take action against illegal activities