ஆளுநர் மளிகை முற்றுகை போராட்டம்! ஜவாஹிருல்லா அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


வரும் 26 ஆம் தேதி கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையை முற்றுகையிட உள்ளதாக தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழக தலைவர் எம்.ஹெச். ஜவாஹிருல்லா அறிவித்துள்ளார்.

கரூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ஜவாஹிருல்லா தெரிவிக்கையில், "மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்த நாளில், தமிழக சிறைகளில் சுமார் 20 ஆண்டுகளாக ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் ஆயுள் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் சார்பில் வலியுறுத்தி வருகிறோம்.

எங்கள் கோரிக்கையை ஏற்று அண்ணா பிறந்த நாலில் 49 நீண்டகால சிறைவாசிகளை விடுதலை செய்ய ஆளுநருக்கு தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளது. 

ஆனால், ஆளுநர் இந்த கோப்புக்கு ஒரு மாதம் ஆகியும் ஒப்புதல் தரவில்லை. ஆளுநர் ஒப்புதல் தராமல் இருப்பது ஜனநாயக விரோத செயல்.

இந்த ஏதேச்சதிகார நடவடிக்கையைக் கண்டித்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் சார்பில் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையை வரும் அக்.26-ம்தேதி முற்றுகையிட உள்ளோம். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TMMK Announce protest


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->