குத்துனா இப்படி குத்தணும்.! விழா மேடையில் ஆட்டம் போட்ட தேமுதிக நிர்வாகிகள்.! - Seithipunal
Seithipunal


குத்துனா இப்படி குத்தணும்.! விழா மேடையில் ஆட்டம் போட்ட தேமுதிக நிர்வாகிகள்.!

நடிகரும், தேமுதிக கட்சியின் தலைவருமான விஜயகாந்தின் 71 வது பிறந்தநாள் விழா கடந்த ஆகஸ்ட் மாதம் 25- ம் தேதி தேமுதிக தலைமை அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது. இந்த விழாவை தமிழகம் முழுவதும் உள்ள தேமுதிகவினர் மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி கொண்டாடி வருகின்றனர். 

இந்த நிலையில், நேற்று முன் தினம் விஜயகாந்த் பிறந்தநாள் விழா, தேமுதிகவின் 19-ம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மயிலாடுதுறையில் நடைபெற்றது.

இந்த விழாவிற்கு தேமுதிக மாவட்ட செயலாளர் ஜலபதி தலைமை தாங்கினார். இதையடுத்து பொதுக்கூட்டத்தில் பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.  

இந்த நிகழ்ச்சியின் இறுதியில் விஜயகாந்த் படத்தின் பாடலுக்கு தேமுதிக நிர்வாகிகள் மேடையில் நடனம் ஆடியுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TMTK supporters dance in mayiladuthurai vijayakanth birthday celebration function


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->