விளையாட்டில் உசேன், தோனி! அரசியலில் நம்ம முதல்வர் ஸ்டாலின் தான் - உதயநிதி ஸ்டாலின் புகழாரம்! - Seithipunal
Seithipunal


"ஓட்டப் பந்தயத்திற்கு ஒரு உசேன் போல்ட்.. கிரிக்கெட்டுக்கு ஒரு தோனி. அதேபோலதான் அரசியல் துறையில் நம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்" என்று, சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சாதனைகளை பட்டியலிட்டு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகழாரம் சூட்டினார்.

மேலும், சட்டப்பேரவையில் சில முக்கிய அறிவிப்புகளையும் அமைச்சர் உதயநிதி அறிவித்துள்ளார். அதன் விவரம் பின்வருமாறு:

கடந்த ஒலிம்பிக் போட்டியில் தமிழ்நாட்டு வீரர், வீராங்கனைகள் 12 பேர் பங்கேற்றிருந்தனர். இந்த முறை பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க 16 பேர் தேர்வு பெற்றுள்ளனர்.

* கடந்த முறை ஒலிம்பிக்கில் பங்கேற்றவர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகையாக ₹5 லட்சம் வழங்கப்பட்டது. இந்த முறை ₹7 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்.

* 115 கோடி ரூபாயில் மகளிர் வேலை வாய்ப்பு மற்றும் பாதுகாப்பு திட்டம் செயல்படுத்தப்படும். 
* மகளிர் வேலை வாய்ப்பு பாதுகாப்பு திட்டம் முதற்கட்டமாக 8 மாவட்டங்களில் செயல்படுத்தப்படும். 
* நான் முதல்வன் திட்டம் 45 ஆயிரம் மாணவர்கள் பயன்பெற துணை மருத்துவ படிப்புகளுக்கும் விரிவுபடுத்தப்படும். 
* மகளிர்க்கு பயனளிக்கும் தகவல்களைத் தரும் மகளிர் தகவல் வங்கி உருவாக்கப்படும்" என்று உதயநிதி ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.

மேலும், முதலமைச்சர் சிறு விளையாட்டு அரங்குகள் 22 தொகுதிகளில் 66 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும். திருவெறும்பூர், தாராபுரம், குளச்சல் உள்ளிட்ட 22 தொகுதிகளில் இந்த மினி ஸ்டேடியம் அமைக்கப்படும். 

* 100 கோடி ரூபாயில் திறன் தமிழ்நாடு நிறை பள்ளிகள் திட்டம் தொடங்கப்படும். 
* இளைஞர்கள் ஒழுக்கத்துடன் சமூக பங்களிப்பை அளிக்க புதிய இளைஞர் கொள்கை வகுக்கப்படும். 
* விளையாட்டு வீரருக்கு ஆண்டுதோறும் வழங்கும் நிதி உதவி இரண்டு லட்சத்திலிருந்து 4 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும் என்று உதயநிதி ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

TN Assembly UdhayNithi Announce for TN Olympic


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->