அரச அதிகாரிகளால் எலோன் மஸ்கின் அதிகாரத்தை பறித்த டொனால்ட் டிரம்ப்..! - Seithipunal
Seithipunal


அமெரிக்காவின் டொனால்ட்  டிரம்ப் அரசில் சிறந்த நிர்வாகத்துக்கான துறை தலைவராக எலான் மஸ்க் நியமிக்கப்பட்டார். இவர் அரசின் செலவை குறைக்க பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
இவர் வெளிநாடுகளுக்கு இதுவரை கொடுக்கப்பட்டு வந்த தேவை இல்லாத நிதியுதவி நிறுத்த்தம், அரசின் பல துறைகளில் பணியாற்றியவர்களை பணி நீக்கம் செய்வது போன்ற அதிரடி முடிவுகள் மஸ்க்கிற்கு பங்கு உண்டு. இதற்கு அமெரிக்கா தரப்பில் ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பி உள்ளன. 

அத்துடன், அமெரிக்க அரசின் ரகசிய தகவல்களை எப்படி தனியார் நிறுவனத்தின் தொழிலதிபரான எலான் மஸ்க்கிற்கு கொடுக்கலாம் என வழக்கும் தொடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அந்நாட்டு அதிபர் டிரமப் '' ஊழியர்களை பதவியில் அமர்த்துவது மற்றும் நீக்குவது குறித்து அரசு துறை தலைவர்கள் தான் முடிவெடுப்பார்கள். எலான் மஸ்க் எடுக்க முடியாது,'' என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அமெரிக்க அமைச்சரவை கூட்டம் டிரம்ப் தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில் எலான் மஸ்க்கும் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் டிரம்ப் குறிப்பிட்டத்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதாவது, பணியில் இருந்து ஊழியர்களை நீக்கவும், சேர்க்கவும் எலான் மஸ்க் பரிந்துரை செய்யலாம். ஆனால், அவர் தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாது. என்று  அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து,  ஓவல் அலுவலகத்தில் நிருபர்களிடம் டிரம்ப் கூறியதாவது: உங்களுக்கு தேவையான, விரும்பும் ஊழியர்களை துறைகள் வைத்துக் கொள்ளலாம். இதனை நாங்களும், எலான் மஸ்க்கும் கண்காணிப்போம். அவர்கள் சிறந்த முறையில் ஊழியர்களை குறைக்கலாம். அப்படி அவர்கள் செய்யாவிட்டால், அதனை டிரம்ப் செய்வார் என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Donald Trump stripped Elon Musk of his power through government officials


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->