ஜூன் 22-இல் மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு; இந்து முன்னணி அறிக்கை..!
Muruga devotees conference in Madurai on June 22
மதுரையில் எதிர்வரும் ஜூன் 22-ஆம் தேதி முருக பக்தர்கள் மாநாடு நடைபெறவுள்ளது.இது குறித்து, ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
சங்க இலக்கியங்கள் வணங்கும் குறிஞ்சி நில தெய்வம், தமிழ் கடவுள் முருகபெருமானின் லட்சக்கணக்கான பக்தர்களை ஒருங்கிணைக்கும் வகையில், ஜூன் 22-இல், மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு நடத்தப்படுகிறது என்றும், இதில், ஐந்து லட்சம் பக்தர்களை பங்கேற்க வைக்க முயற்சி நடந்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், ஹிந்து தர்மத்தை, கோவில்களை, பண்பாட்டை காக்க, முருக பக்தர்கள் ஒருங்கிணைய வேண்டிய காலகட்டத்தில் உள்ளோம். இதற்காக ஜூன் 22-இல், முருக பக்தர்கள் மாநாட்டை நடத்த ஹிந்து முன்னணி முடிவு செய்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த மாநாட்டில் பங்கேற்கபதற்கு வீடு வீடாக சென்று முருக பக்தர்களை அழைக்கவும், மாநாட்டின் நோக்கத்தை மக்களுக்கு விளக்கவும், பல்வேறு தொடர் நிகழ்ச்சிகளை நடத்தவும் திட்டமிட்டுள்ளோம் என்று அவர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Muruga devotees conference in Madurai on June 22