வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு விவகாரம்: பேச விடாமல் தடுத்த சபாநாயகர்! பாமக வெளிநடப்பு! - Seithipunal
Seithipunal


வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று, சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டும் என்று, தமிழக சட்டப்பேரவையில் பாமக சட்டமன்ற குழு தலைவர் ஜி.கே.மணி வலியுறுத்தி பேசினார்.

அப்போது குறித்த சபாநாயகர், அமைச்சர் சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து பேச அனுமதி மறுப்பு தெறிக்கவே, பாமக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.

வெளிநடப்பிற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த பாமக சட்டமன்ற குழு தலைவர் ஜி.கே.மணி தெரிவிக்கையில், "சாதி வாரி கணக்கெடுப்பும், உள் ஒதுக்கீடும் தனித்தனி பிரச்சினை. ஏற்கனவே அருந்ததியர்கள், இஸ்லாமியர்களுக்கு தமிழக அரசு உள் ஒதுக்கீடு வழங்கியுள்ளது.

நிலுவையில் உள்ள வன்னியர் 10.5% உள்ஒதுக்கீடு பற்றி தமிழ்நாடு சட்டப்பேரவையில் விவாதித்தோம். சாதிவாரி கணக்கெடுப்பு, வன்னியர் உள்ஒதுக்கீடு இரண்டும் தனித்தனி பிரச்னைகள். உள்ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் இருக்கிறது.

இப்படி நான் பேசியதில் எந்த தவறும் கிடையாது. ஆனால் சபாநாயகர் என்னை பேச விடாமல், அமைச்சர்களுக்கு வாய்ப்பளித்து தடுக்க முயற்சி செய்கின்றனர். 

இப்போது என்ன சொல்கிறார்கள் என்றால், சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுத்த பிறகு தான் வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு கொடுக்க முடியும் என்கின்றனர். 

மாநில அரசின் அதிகாரத்துக்கு உட்பட்டஅதைத்தான் நாங்கள் கேட்கிறோம். ஆனால் இவர்கள் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்திய பிறகு தான் உள்ளது தருவோம் என்கின்றனர். அதை திசை திருப்பும் வகையில், அரசியல் பேசி, கூட்டணி பேசி திசை திருப்புகின்றனர்.

இதற்கும் அரசியலுக்கும், எந்த சம்பந்தமும் கிடையாது. ஒரு சமூக நீதிப் பிரச்சனையை அரசியலாக்க கூடாது. உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழக அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது என்று தான் நாங்கள் கேட்கிறோம். இந்த மூன்றாண்டுகளாக நீங்கள் தரவுகளை சேகரித்துக் கொண்டிருக்கிறீர்களா?

இந்த உண்மையை பேசக்கூட சபாநாயகர் அனுமதிக்காமல், அமைச்சர்களை பேசவிட்டு தடுக்க முயல்கிறார்" பாமக சட்டமன்ற குழு தலைவர் ஜி.கே.மணி தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN Assembly Vanniyar Reservation issue PMK GK Mani June 2024


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->