எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டம்.. தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று பீகார் பயணம்.!
TN cm MK Stalin travelling to bhihar for opposition party meeting
வரும் 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு எதிராக ஒரு வலுவான எதிரணியை உருவாக்கும் நோக்கத்தில் எதிர்க்கட்சிகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன.
அந்த வகையில் பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமார் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சி தலைவர்களை ஒன்றிணைக்கும் ஒன்றிணைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். அந்த வகையில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் வரும் கடந்த ஜூன் 12-ம் தேதி நடைபெற இருந்தது.
இதனிடையே ராகுல் காந்தி அமெரிக்க பயணம் மற்றும் திமுக உள்ளிட்ட சில அரசியல் கட்சிகள் இந்த ஆலோசனை கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தது. மேலும், ஒடிசாவில் ஏற்பட்ட ரயில் விபத்தின் காரணமாகவும் இந்த கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்த நிலையில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி, நாளை ( ஜூன் 23ஆம் தேதி) எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் பீகார் மாநில தலைநகர் தலைநகர் பாட்னாவில் நடைபெறுகிறது.
மேலும் இதுபோன்ற ஆலோசனை கூட்டங்களுக்கு கட்சியின் பிரதிநிதிகளை அனுப்பி வைக்காமல் கட்சியைத் தலைவர்கள் பங்கேற்க வேண்டும் என்று நிதிஷ்குமார் சமீபத்தில் வலியுறுத்தி இருந்தார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தமிழக முதல்வர் மு க ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் பங்கேற்கின்றனர்.
இதனிடையே நேற்று முன்தினம் திருவாரூரில் நடைபெற்ற கலைஞர் கோட்டம் திறப்பு விழாவில் பேசிய முதலமைச்சர் மு க ஸ்டாலின் மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளின் ஒருங்கிணைப்பு கூட்டம் ஜூன் 23ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் பங்கேற்க நானும் பாட்னா சொல்கிறேன் என தெரிவித்திருந்தார்.
அந்த வகையில் இன்று மாலை சென்னையில் இருந்து விமானம் மூலம் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பாட்னா செல்ல உள்ளார்.
English Summary
TN cm MK Stalin travelling to bhihar for opposition party meeting