நாடாளுமன்ற தேர்தல் || தமிழகத்தில் இருந்து வெளியான முக்கிய அறிவிப்பு!! - Seithipunal
Seithipunal


அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற பொது தேர்தலுக்கான முதற்கட்ட பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் இந்த சூழலில் தமிழ்நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் உடன் வரும் அக்டோபர் 25ஆம் தேதி தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு ஆலோசனை நடத்த உள்ளார்.

முதற்கட்டமாக வெளியிடப்படும் வரைவு வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை வாக்கு இயந்திரங்களின் எண்ணிக்கை, வாக்காளர் பட்டியல் தயாரிப்பு உள்ளிட்டுவை குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். 

வரும் அக்டோபர் 25ஆம் தேதி காலை 11 மணியளவில் தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகத்தில் இந்த ஆலோசனைக் கூட்டமானது நடைபெறவுள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் ஏற்பாடுகள் குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் தங்களின் கருத்துக்களை முன்வைக்க உள்ளனர்.

இந்த ஆலோசனைக் கூட்டம் நிறைவு பெற்ற பிறகு வரும் அக்டோபர் 27ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. 5 மாநில தேர்தலை முன்னிட்டு தமிழகத்திலிருந்து 40 ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் தேர்தல் பார்வையாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த ஆலோசனைக் கூட்டமானது நடைபெறவுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN election officer all parties meeting on oct25th for parliamentary elections


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->