ரேஷன் கடைகளில் பணிபுரிவதற்கு ஓர் அறிய வாய்ப்பு.! அக்டோபர் 13 வரை விண்ணப்பிக்கலாம்..!  - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ், கூட்டுறவு சங்கத்தின் மூலம் நடத்தப்படும் நியாயவிலைக் கடைகளில் விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணியிடங்களை, அந்தந்த மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையங்கள் மூலம் நிரப்பப்பட்டு வருகிறது.

இதுகுறித்து, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம் அனைத்து மாவட்ட ஆட்சியர் மற்றும் இணைப்பதிவாளர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில், மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தின் குழு உறுப்பினர்கள், கூட்டுறவு கடைகளின் விற்பனையாளர் மற்றும் கட்டுநர் தேர்வு தொடர்புடைய விதிகளில் சில திருத்தங்கள் செய்து அரசாணை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. 

அந்த அரசாணையின் படி, "ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தில், தற்போது மாவட்ட ஆட்சியரால் நியமனம் செய்யப்படும் ஒரு வருவாய்க் கோட்டாட்சியர், மாவட்ட உணவுப்பொருள் வழங்கல் அலுவலர் உள்ளிட்டோர் குழு உறுப்பினர்களாக புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். 

மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையங்கள் மூலம் கூட்டுறவு நியாயவிலைக் கடைகளுக்கான விற்பனையாளர், கட்டுநர் தேர்வுக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ள ஆலோசனை செய்யப்பட்டுள்ளது. மேலும், வெவ்வேறு கட்ட  நடவடிக்கைகளுக்கு காலவரையறையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆள்சேர்ப்பு நிலையத்தில் தங்களால் நியமனம் செய்யப்பட வேண்டிய ஒரு வருவாய்க் கோட்டாட்சியரை தாங்களே உடனடியாக நியமனம் செய்து ஆணை வழங்கி, அந்த ஆணையின் நகலினை தங்களுடைய மாவட்டத்திற்கு தொடர்புடைய கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளருக்கு உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும். 

இதையடுத்து, குழு உறுப்பினராக சேர்க்கப்பட்டு உள்ள மாவட்ட உணவுப்பொருள் வழங்கல் அலுவலருக்கு, மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தின் பணிகளுக்கு முன்னுரிமை கொடுத்து பணியாற்றுவதற்கு தக்க அறிவுரைகள் வழங்க வேண்டும். 

கொரோனா தொற்றின் காரணமாக இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த தெரிவு நடவடிக்கைகளுக்கு அதிக எண்ணிக்கையிலான நபர்கள் விண்ணப்பிக்கக்கூடும் என்பதால் தெரிவு நடவடிக்கைகளை எந்தவித புகாருக்கும் இடமில்லாமல் நடத்த வேண்டும்.

இதைத் தொடர்ந்து, நேர்முகத்தேர்வு நடைபெறும் நாளில் மையத்திற்கு பாதுகாப்பு வசதியை ஏற்படுத்தி கொடுக்க மாவட்ட கண்காணிப்பாளருக்கு உரிய அறிவுரைகள் வழங்க வேண்டும். 

இதன்பிறகு, இப்பணிக்கு அக்டோபர் 13ம் தேதி முதல் நவம்பர் 14ம் தேதி வரை பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட உள்ளன. அதற்கான நேர்முகத்தேர்வு டிசம்பர் 15ம் தேதி முதல் 30ம் தேதி வரை நடக்க இருக்கிறது.

அடுத்த ஆண்டு ஜனவரி 2ம் தேதி, தேர்வு செய்யப்பட்டவர்களின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டு, அவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட உள்ளது". என்று அந்த சுற்றறிக்கையில் கூட்டுறவு சங்க பதிவாளர் சண்முக சுந்தரம் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN Fair Price Stores job apply last date oct 13


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->