தூத்துக்குடி : ஸ்டெர்லைட் ஆலையின் கழிவுகளை தமிழக அரசே அகற்ற முடிவு.!!
TN government decided to remove wastege in sterlite factory
தூத்துக்குடி : ஸ்டெர்லைட் ஆலையின் கழிவுகளை தமிழக அரசே அகற்ற முடிவு.!!
சமீபத்தில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையின் வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஸ்டெர்லைட் ஆலை சார்பில் வாதாடிய வழக்கறிஞர், ஸ்டெர்லை ஆலையில் உள்ள கழிவுகள் நீக்கப்படாமல் உள்ளதாகத் நிபுணர்கள் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவ்வாறு கழிவுகள் நீக்கப்படவில்லை என்றால் ஆலையின் உபகரணங்கள் பாதிப்படையும் என ஆலையை ஆய்வு செய்த பின்னர் நிபுணர் குழு வழங்கிய அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து உள்ளோம். மேலும் கழிவுகளை ஆலையிலிருந்து அகற்ற அதிகாரிகள் அனுமதிக்க வில்லை" என்று குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்.
இதனை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம் ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள கழிவுகளை அகற்ற அனுமதி வழங்கியும், அதற்கான வழிகாட்டுதலை தமிழக அரசு வழங்க வேண்டும் என்றும் கூறி தீர்ப்பு வழங்கியது.
இந்த நிலையில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள கழிவுகளை அகற்றும் பணியை தமிழக அரசே செய்வதாக முடிவு செய்துள்ளது. இதற்காக துணை ஆட்சியர் தலைமையில் ஒன்பது பேர் கொண்ட குழு அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள கழிவுகளை அகற்றுவதற்கான செலவை ஸ்டெர்லைட் நிர்வாகமே ஏற்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், செயலற்ற இயந்திரங்களை அகற்ற, மூலப்பொருட்கள், உதிரிபாகங்களை ஆலைக்கு வெளியே கொண்டு செல்ல, ஆலை பாதுகாப்பை ஆய்வு மதிப்பீடு செய்தல் உள்ளிட்ட ஸ்டெர்லைட் நிர்வாகத்தின் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
English Summary
TN government decided to remove wastege in sterlite factory