மதுபாட்டிலுக்கு கூடுதல் கட்டணம் வசூல் - தமிழக அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை.! - Seithipunal
Seithipunal


மதுபானக் கடைகளில் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்தால் இடைநீக்கம் செய்யப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு வாணிபக் கழகம் தெரிவித்துள்ளதாவது:- "டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்யக் கூடாது என்று ஏற்கனவே ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அவ்வாறு தவறு கண்டறியப்படும் பட்சத்தில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்தும் விவரிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு கூறியுள்ளது. இருப்பினும், சமீப காலமாக மதுபானக் கடையில் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்யப்படுவதாக தலைமை அலுவலகத்திற்கு புகார்கள் வந்த வண்ணம் உள்ளது.

இதை தடுக்கும் வகையில், இனி மதுபானக் கடைகளில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக ரூ.10 அல்லது அதற்கு மேல் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. மதுபானக் கடைகளில் கூடுதல் விலைக்கு மதுவிற்பனை செய்யப்பட்டால், அங்குள்ள மேற்பார்வையாளர் உள்பட அனைத்து ஊழியர்களும் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள் என்று தமிழ்நாடு அரசு எச்சரித்துள்ளது.

மதுபானக் கடைகளில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைவிட ரூ.10 மற்றும் அதற்கு மேல் கூடுதலாக வசூலித்தால் ஊழியர்கள் அனைவரும் கூண்டோடு இடைநீக்கம் செய்யப்படுவார்கள்” என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tn government order tasmac employees suspend extra payment collection


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->