ரூ.15,700 - 58,100 சம்பளம்: 8th பாஸ் போதும், தமிழ் வளர்ச்சித் துறையில் பணி! வாய்ப்பை தவற விடாதீங்க!
TN Govt Job july 2024
தமிழ் வளர்ச்சித் துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு வரும் 26 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: தமிழ் வளர்ச்சித் துறையில் அலுவலக உதவியாளர்
மொத்த காலியிடங்கள் : 4
வயது வரம்பு: 18 - 32 வயதுக்குள் இருக்க வேண்டும்.
மாதம் ஊதியம் : ரூ.15,700 முதல் ரூ.58,100 வரை
தகுதி : எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணி : தமிழ் வளர்ச்சித் துறையில் தூய்மையாளர் பணி
மொத்த காலியிடங்கள் : 1
வயது வரம்பு: 18 - 32 வயதுக்குள் இருக்க வேண்டும்.
மாதம் ஊதியம் : ரூ.15,700 முதல் ரூ.58,100 வரை
தகுதி : ஐந்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணி: தமிழ் வளர்ச்சித் துறையில் தோட்டத் தூய்மையாளர் பணி
மொத்த காலியிடங்கள் : 1
வயது வரம்பு: 18 - 32 வயதுக்குள் இருக்க வேண்டும்.
மாதம் ஊதியம் : மாதம் ரூ.4,100 முதல் ரூ.12,500 வரை
தகுதி: ஐந்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு சலுகை: உச்சபட்ச வயதுவரம்பில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 2 ஆண்டுகளும் சலுகை வழங்கப்படும்.
விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள்: 26.7.2024
விண்ணப்பிக்கும் முறை: www.tamilvalarchithurai.tn.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
இவ்விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, அதனுடன் அண்மையில் நீங்கள் எடுத்த புகைப்படத்தையும், தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து கீழ் குறிப்பிட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர்,
தமிழ் வளர்ச்சி இயக்கம்,
தமிழ்ச்சாலை,
எழும்பூர்,
சென்னை- 600008