ரூ.11.54 லட்சத்தில் வீடு, மாடு, ஆடு வாங்க வட்டியில்லாத கடன் - மாஞ்சோலை தொழிலாளர்களின் மறுவாழ்வுக்கு அரசு எடுத்த நடவடிக்கை! - Seithipunal
Seithipunal


மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களின் மறுவாழ்வுக்கு அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன? என்பது குறித்து, மாவட்ட ஆட்சியர் மற்றும் புலிகள் காப்பக துணை இயக்குநர் (தமிழக அரசு தரப்பு) தாக்கல் செய்த அறிக்கையின் விவரம் வெளியாகியுள்ளது. 

அதன்படி, தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய சட்டப்பூர்வ பணிப் பலன்கள், மாதாந்திர ஓய்வூதியம் ஆகியவற்றை முறையாக பெற்று வழங்க அரசு நடவடிக்கை எடுக்கப்படும்.

மணிமுத்தாறு அருகே அரசு சார்பில் கட்டப்பட்டு தயார் நிலையில் உள்ள 240 வீடுகளை தொழிலாளர்களுக்கு வழங்க அரசு தயராக உள்ளது. இலவச வீட்டு மனைப் பட்டா, கலைஞர் கனவு இல்லத்தின் கீழ் வீடுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

ரூ.11.54 லட்சம் மதிப்பு கொண்ட ஒரு வீட்டுக்கு அரசு ₹8.5 லட்சம் மானியமாக வழங்குகிறது. மீதம் ₹3.04 லட்சத்தை மட்டும் பயனாளிகள் செலுத்த வேண்டும். கூடுதல் மானியம் அளித்து வீடுகளை வழங்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

55 வயதுக்குட்பட்ட தொழிலாளர்களுக்கு அண்ணல் அம்பேத்கர் மற்றும் நீட்ஸ் திட்டத்தின் கீழ் சுய தொழில் தொடங்க மானியத்துடன் கூடிய வங்கிக் கடன் ஏற்பாடு செய்ய அரசு தயாராக உள்ளது.

இளைஞர்களுக்கு திறன் பயிற்சியும், அதற்கேற்ற வேலைவாய்ப்பும் ஏற்பாடு செய்து தரப்படும். மேலும், சிறு கால்நடைப் பண்ணை அமைக்க அல்லது கறவை மாடுகள், ஆடுகள் வாங்கிட வட்டியில்லாத கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

குழந்தைகளுக்கு பள்ளிக்கல்வி பாதிக்காத வகையில் அவர்கள் விரும்பிய பள்ளியில் சேர்க்கவும், விடுதிகளில் தங்க வைத்து படிக்க வைக்கவும் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும்.

தொழிலாளர்களின் ஆதார், ரேஷன் கார்டு உள்ளிட்ட அடையாள அட்டைகளை அவர்கள் விரும்பும் இடத்திற்கு மாற்றி வழங்க ஒற்றைச் சாரள முறையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும்.

தொழிலாளர்களுக்கு கூடுதல் இழப்பீடு வழங்கவும் ’பர்மா பாம்பே டிரேடிங் கம்பெனி’ நிறுவனத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN Govt Manjolai Tea Estate Labours


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->