தனியார் நிறுவனங்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக சுகாதாரத் துறை.!!
tn govt new order for office workers
தமிழகத்தில் கொரோனாவின் மூன்றாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. ஊரடங்கை வரும் 31-ஆம் தேதி வரை நீட்டித்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் நேற்று 23,888 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 29 பேர் உயிரிழந்துள்ளனர். 15,036 பேர் டிஷ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.
அதன்படி, அலுவலகங்களில் பணிபுரியும் போது முகக்கவசம் அணியாதவர்களை உடனடியாக வெளியேற்ற வேண்டும்.
பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்வதை உறுதி செய்ய வேண்டும்.
அறிகுறி உள்ள பணியாளர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.
300 நபர்களுக்கு மேல் உள்ள தொழிற்சாலைகளில் சுகாதார ஆய்வாளரை நியமிக்க வேண்டும் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
English Summary
tn govt new order for office workers