நம்பர் 1 நடிகருடனான சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி! 15 வருட நண்பனை திருமணம் செய்யும் கீர்த்தி சுரேஷ்! - Seithipunal
Seithipunal


கீர்த்தி சுரேஷ் திருமணம்: காதலை உறுதிப்படுத்திய நடிகை, ரசிகர்கள் உற்சாகம்!

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழும் கீர்த்தி சுரேஷ், தனது திருமணம் குறித்த வதந்திகள் தொடர்பாக முதல் முறையாக மனம் திறந்துள்ளார். டிசம்பர் மாதத்தில் திருமணம் நடைபெற இருக்கிறது என இணையத்தில் பரவிய தகவல்களுக்கு தற்போது அவர் உறுதி அளித்துள்ளார்.

சினிமா பாரம்பரியக் குடும்பத்தில் இருந்து வந்த கீர்த்தி, தனது சிறுவயதில் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானார். 2015 ஆம் ஆண்டு "இது என்ன மாயம்" படத்தின் மூலம் ஹீரோயினாகத் திரையுலகில் காலடி வைத்த கீர்த்தி, தொடர்ந்து விஜயின் "பைரவா," சிவகார்த்திகேயனின் "ரஜினி முருகன்," சாவித்ரியின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட "மகாநதி" உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தார்.

தற்போது, அட்லீ தயாரிப்பில், "பேபி ஜான்" என்ற படத்தின் மூலம் ஹிந்தி திரையுலகிலும் தனது அறிமுகத்தை செய்ய உள்ளார். இந்த நிலையில், அவரது காதல் மற்றும் திருமணம் குறித்து சில மாதங்களாகவே வதந்திகள் பரவி வந்தன.

திருமண தகவல் மற்றும் மாப்பிள்ளை விவரம்

கீர்த்தி சுரேஷின் மாப்பிள்ளை ஆண்டனி தட்டில் என்பவர், கேரளாவைச் சேர்ந்த தொழிலதிபர். துபாயிலும் சென்னையிலும் தொழில்முனைவாக செயல்படும் ஆண்டனி, சுமார் ₹100 கோடி சொத்து மதிப்பு கொண்டவர் என கூறப்படுகிறது. கீர்த்தி மற்றும் ஆண்டனி முதலில் நன்பர்களாக இருந்து பின்னர் காதலர்களாக மாறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், கீர்த்தி தனது சமூக வலைதளத்தில், ஆண்டனியுடன் நிற்கும் புகைப்படத்தை பகிர்ந்து, "15 ஆண்டுகள்" என்று குறிப்பிட்டு காதலை உறுதிப்படுத்தியுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி ரசிகர்களிடையே பரவசத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருமண நாளுக்கான எதிர்பார்ப்பு

கீர்த்தி மற்றும் ஆண்டனியின் திருமணம் டிசம்பர் 11 மற்றும் 12 தேதிகளில் கோவாவில் நடைபெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இது ஒரு பெரிய நட்சத்திர திருமணமாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரசிகர்களின் வாழ்த்துகள்
கீர்த்தி மற்றும் ஆண்டனியின் காதல் வாழ்வை உற்சாகமாக கொண்டாடி, ரசிகர்கள் அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள். கீர்த்தியின் திருமணம் தென்னிந்திய சினிமாவின் மிகப்பெரிய நிகழ்வாக மாறவுள்ளது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Controversy with No 1 actor ends Keerthy Suresh to marry a friend of 15 years


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->