ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் எஸ்.பி.பி குரலை பயன்படுத்த எதிர்ப்பு..! - Seithipunal
Seithipunal


சினிமா துறையில் ஏ.ஐ. தொழில் நுட்பம் மூலம் மறைந்த நடிகர்களை மீண்டும் நடிக்க வைக்கவும், மறைந்த பாடகர்கள் குரலை பயன்படுத்தி பாடல்களை உருவாக்கவும் முடிகிறது. இது மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்துகிறது.

அதாவது, விஜய்யின் 'தி கோட்' படத்தில் மறைந்த பாடகி பவதாரிணி குரலில் பாடல் இடம்பெற்றது. ரஜினிகாந்தின் 'லால் சலாம்' படத்தில் மறைந்த பாடகர்கள் பம்பா பாக்யா, ஷாகில் ஆகியோரின் குரலில் பாடல்களை ஏ.ஆர்.ரகுமான் உருவாக்கி இருந்தார்.

இதைத் தொடர்ந்து 'வேட்டையன்' படத்தில் இடம்பெற்ற மனசிலாயோ பாடலில் மறைந்த பாடகர் மலேசியா வாசுதேவன் குரலை பயன்படுத்தி இருந்தனர். இந்த நிலையில் மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் குரலை ஏ.ஐ. தொழில் நுட்பத்தில் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதற்கு அவரது மகனும் பாடகருமான எஸ்.பி.பி.சரண் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவித்ததாவது:- "ஏ.ஐ. தொழில் நுட்பம் மூலம் எனது தந்தை எஸ்.பி.பாலசுப்பிரமணியம் குரலை பயன்படுத்த அனுமதி கேட்டு பலர் என்னிடம் பேசி வருகிறார்கள்.

ஆனால் நான் அனுமதி கொடுக்க மறுத்துவிட்டேன். ஏ.ஐ. மூலம் அவரது குரலை கேட்க எங்களுக்கு விருப்பம் இல்லை. ஏ.ஐ. தொழில் நுட்பத்தில் பயன்படுத்தும் குரல் உணர்வுப்பூர்வமாக இருக்காது'' என்றுத் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

spb saran opposition use spb voice in ai method


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->