மாணவர்களுக்கு காலை உணவு திட்டம்.! வழங்கப்படும் உணவு என்ன? வெளியான அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


அரசு பள்ளியில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையில் பயிலும் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. முதல் கட்டமாக நகராட்சி, மாநகராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் உள்ள பள்ளிகளில் இத்திட்டம்  செயல்படுத்தப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட இருந்தது. 

இந்நிலையில். ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு இலவசகாலை உணவு வழக்கும் அரசாணைக்கு தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் நேற்று கையொப்பமிட்டு ஒப்புதல் வழங்கினார். இதையடுத்து, தொடக்கப்பள்ளியில் மாணவர்களுக்கு காலை உணவு வழங்குவதற்கான குறிக்கோள்கள் மற்றும் உணவு வகைகள் குறித்து அறிவிப்புகள் வெளியாகி உள்ளது. 

குறிக்கோள்கள் :

மாணவ, மாணவியர்கள் பசியின்றி பள்ளிக்கு வருவதை உறுதி செய்தல். 

மாணவ, மாணவியர்கள் ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்படாமலிருத்தலை உறுதி செய்தல்.

 மாணவ, மாணவியரின் ஊட்டச்சத்து நிலையை உயர்த்துதல், குறிப்பாக இரத்த சோகை குறைபாட்டினை நீக்குதல்.

பள்ளிகளில் மாணவ, மாணவியர்களின் வருகையை அதிகரித்தல், தக்க வைத்துக் கொள்ளுதல்.

வேலைக்குச் செல்லும் தாய்மார்களின் பணிச்சுமையை குறைத்தல்.

காலை உணவு வகைகள் :

பின்வரும் பல்வேறு விதமான சிற்றுண்டி வகைகளில் ஏதேனும் ஒன்றை குறிப்பிட்டுள்ள நாட்களில் வழங்க வேண்டும்.

திங்கட்கிழமை - உப்புமா வகை :

ரவா உப்புமா + காய்கறி சாம்பார்
சேமியா உப்புமா+ காய்கறி சாம்பார்
அரிசி உப்புமா+ காய்கறி சாம்பார்
கோதுமைரவா உப்புமா+காய்கறி சாம்பார்

செவ்வாய்கிழமை -  கிச்சடி வகை :

ரவா காய்கறி கிச்சடி
சேமியா காய்கறி  கிச்சடி
சோள காய்கறி கிச்சடி
கோதுமை ரவாகாய்கறி கிச்சடி

புதன்கிழமை - பொங்கல் வகை :

ரவா பொங்கல்+ காய்கறி சாம்பார்
வெண்பொங்கல் + காய்கறி சாம்பார்

வியாழக்கிழமை - உப்புமா வகை :

சேமியா உப்புமா+ காய்கறி சாம்பார்
அரிசி உப்புமா+ காய்கறி சாம்பார்
கோதுமை ரவா உப்புமா + காய்கறி சாம்பார்

வெள்ளிக்கிழமை - கிச்சடியுடன் இனிப்பு :

ஏதாவது ஒரு கிச்சடி வகையுடன் (செவ்வாய்கிழமை உணவு வகையின்படி) 
ரவா கேசரி
சேமியா கேசரி வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN Govt School Morning Breakfast


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->