தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு நிலை என்ன.? முதலமைச்சர் தலைமையில் ஜூலை 11ல் ஆலோசனை.!!
TN law and order situation consulting meeting headed by CM on July11
தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் நாளை மறுநாள் சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் அனைத்து மாவட்ட எஸ்.பிக்ள், டிஐஜிக்கள் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளுடன் தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு பிரச்சனை குறித்து அவசர ஆலோசனை நடத்த உள்ளார். தமிழ்நாடு காவல்துறை டிஜிபியாக சங்கர் ஜிவால் பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக காவல்துறை உயர் அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.
அண்மையில் கோவை டிஐஜி விஜயகுமார் தற்கொலை செய்து கொண்ட நிலையில் காவலர்கள் மன அழுத்தம் இல்லாமல் பணியாற்ற எந்தவிதமான ஆலோசனை வழங்க வேண்டும். இது போன்ற சம்பவங்கள் இனி நடைபெறாமல் இருக்க காவலர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய பயிற்சிகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளது.
அதேபோன்று தமிழகத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை குறித்தும் மாவட்ட காவல் துறை அதிகாரிகளுடன் முதல்வர் மு.க ஸ்டாலின் விரிவாக ஆலோசனை நடத்த உள்ளார். காவல்துறை அதிகாரிகளோடு உள்துறை செயலாளர் அமுதா ஐஏஎஸ் உள்ளிட்ட பல்வேறு துறை செயலாளர்களும் பங்கேற்க உள்ளனர்.
English Summary
TN law and order situation consulting meeting headed by CM on July11