செந்தில்பாலாஜியின் மதுவிலக்குத்துறை இவருக்கா? அடிபடும் இரு பெயர்கள்! இன்றே நடக்கும் அமைச்சரவை மாற்றம்?!  - Seithipunal
Seithipunal


திமுக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இன்று ஜாமின் கிடைக்கவில்லை என்றால் அவரிடம் உள்ள மதுவிலக்கு துறை மற்றும் மின்சாரத்துறை பறிக்கப்பட்டு, துறைகள் இல்லாத அமைச்சராக மட்டும் நீடிப்பார் என்ற பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் இன்றே தமிழக அமைச்சரவையில் சில மாற்றங்களும் இருக்கலாம். அதாவது தற்போது இருக்கக்கூடிய அமைச்சர்களுக்கு, செந்தில் பாலாஜி கவனித்து வந்த துறைகள் கூடுதல் பொறுப்பாக வழங்கப்படலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

அதன்படி, செந்தில் பாலாஜியிடமிருந்து பறிக்கப்படும் மதுவிலக்கு ஆயத்துறை திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும், அமைச்சருமான ஐ பெரியசாமியிடம் ஒப்படைக்கப்படலாம் என்ற பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், கொங்கு மண்டலத்தில் பெரிதாக அமைச்சர்கள் யாரும் இல்லாத நிலையில், தற்போது இருக்கும் அமைச்சர் சாமிநாதனுக்கு இந்த மதுவிலக்கு துறை கூடுதல் துறையாக ஒதுக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிய வருகிறது.

மின்சாரத் துறையைப் பொறுத்தவரை தற்போது நிதி அமைச்சராக இருக்கக்கூடிய தங்கம் தென்னரசுவிடம் ஒப்படைக்க 100% வாய்ப்பு உள்ளதாக திமுக வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN Minister Senthilbalaji case TN Cabinate may be change soon


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->