#தமிழகம் || துப்பாக்கி முனையில் 8 ரவுடிகளை கைது செய்த போலீசார்.!  - Seithipunal
Seithipunal


காஞ்சிபுரம் அருகே துப்பாக்கி முனையில் 8 ரவுடிகளை போலீசார் அதிரடியாக கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில், குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள ரவுடி லெனின் வீட்டில் பதுங்கி இருந்த 8 ரவுடிகளை, துப்பாக்கி முனையில் மடக்கிப்பிடித்து போலீசார் கைது செய்துள்ளனர்.

கொலை, கொள்ளை, ஆட்கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ரவுடி லெனின் என்பவர், சேலம் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், லெனினின் கூட்டாளிகளான 8 பேர் காஞ்சிபுரம் மாவட்டம், நடுவீரப்பட்டு பகுதியில் அமைந்துள்ள வீட்டில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனை அடுத்து, அங்கு சென்ற போலீசார் துப்பாக்கி முனையில் 8 பேரையும் கைது செய்து உள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து வீச்சரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

tn police arrest 8 rowdy


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->